About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Saturday, January 14, 2012

உலக நாடுகளில் அறுவடை திருவிழா


அமெரிக்கா

‘கிரீன் கார்ன் ஃபெஸ்டிவல்’ என்று பூர்வகுடி அமெரிக்க மக்களால் கொண்-டாடப்படும் அறுவடை விழா பல நாள்கள் தொடர்ந்து நடைபெறும். அறுவடைக்குத் தயாராக முதல் சோளம் தயாரானவுடனே வரும் பௌர்ணமியன்று இந்த விழா நடக்கும். இந்த விழா காலம் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் மன்னிக்கும் நாளாகவும் இம்மக்களால் கொண்டாடப்படுகிறது. தலையில் இறகுகள் மணிகள் ஆகியவற்றைச் சூடிக்கொண்டு பாரம்பரிய முறையில் அலங்கரிக்கப்பட்ட வண்ணமயமான உடைகளுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து உற்சாகமாக அறுவடையை கொண்டாடுகின்றனர்.

கொரியா

எட்டாவது சந்திர மாதத்தின் 15வது நாளில் (செப்டம்பர்/அக்டோபர் மாதத்தில்) கொரியர்களாள் கொண்டாடப்படும் அறுவடை விழாவுக்கு ’சூ சாக்’ அல்லது ‘அறுவடை நிலவுத் திருநாள்’ என்று பெயர்.  புதிதாக விளைந்த உணவு பொருள்கள் முன்னோருக்கு படைக்கப்படு-கின்றன. ‘சாங்பியான்’ எனப்படும் பிறை வடிவ அரிசிப் பலகாரம் இந்த பண்டிகையின் போது உண்ணப்படுகிறது.

இஸ்ரேல்

இஸ்ரேலில் கொண்டாடப்படும் அறுவடை விழாவுக்கு ‘சுக்கோத்’ என்று பெயர். யூதர்கள, தாம் பழங்காலத்தில் செய்த திராட்சை அறுவடையை நினைவுகூரும் வகையில் ஏழு நாள்கள் இந்த விழாவை கொண்டாடுகின்றனர்.

ஜப்பான்

அரிசி அறுவடையின் அடிப்-படையிலேயே ஜப்பானில் அறுவடைநாள் நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. விசேஷ நிகழ்ச்சி நடைபெறும்வரை புதிதாக விளைந்த அரிசியை யாரும் உண்ணக்கூடாது. நடனத்தோடு அமர்க்கள-மாக நடைபெறும் பெரியவிழாவான இது உழைப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

ஃபிரான்ஸ்

ஃபிரான்ஸ் நாட்டின் முக்கிய விளை-பொருளாக இருப்பது ஒயின்(மது) தயாரிப்-பின் மூலப்பொருளான திராட்சையே. அதனால் ஆண்டுதோரும் ஜனவரி 22ல் ’ஒயின் தயாரிப்பாளர்கள் நாள்’ தான் அறு-வடை விழாவாக கொண்டாடப்படும். 

ஜெர்மனி

மலைகளில் மேய்ச்சல் முடித்துவிட்டு ஆடு,மாடு மேய்ப்பவர்கள் வீடு திரும்பும் நாள், திராட்சை விளைச்சலை கொண்டாடும் ‘அக்டோபர் திருவிழா’ என் இரண்டு விதமான அறுவடை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

சீனா

சீனர்களின் காலண்டர்படி ஆண்டின் எட்டாவது மாதத்தின் 15வது நாள் அறுவடை விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அரிசி, கோதுமை அறுவடைக்குப் பின் கொண்டாடப்படும் இவ்விழாவின் போது ‘மூன் கேக்’ என்னும் பாரம்பரியமான பலகாரத்தை உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து உண்ணு-கிறார்கள். குடும்பத்தோடு ’நிலவைப் பார்த்தல்’ சடங்கும் இரவில் நடைபெறும்.

பிரிட்டன்

பிரிட்டனில் அறுவடை விழா கோதுமை அறுவடை செய்யப்பட்ட பின்பும் ஆப்பிள்கள் கொய்யப்பட்ட பின்பும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவ தேவாலயங்கள் பூக்கள், செடி கொடிகளால் அழகாக அலங்கரிக்கப்-படும். கடைசியாக விளைந்த கோதுமையில் செய்யப்பட்ட ரொட்டியுடன் பழங்-கள் பூக்கள் ஆகியவை இறைவனுக்கு நன்றி செலுத்துவிதமாகப் படைக்கப்படு-கின்றன.

ஆப்பிரிக்கா

ஆப்ரிக்க நாடுகளில் அறுவடை பண்டிகையின் போது ஆடல் பாடல்கள் களைக்கட்டும். பல்வேறு கதைகளை சொல்லும் விதவிதமான நடனங்கள் அப்போது இடம்பெறும். பயிர்களை நல்ல ஆவிகள் காப்பதாகவும் கெட்ட ஆவிகள் அழிப்பதாகவும் நம்பும் இவர்கள் பயிர்களை காத்து விளைச்சளைக் கொடுத்த ஆவிகளுக்கு நன்றி சொல்லி தமது முதல் விளைச்சளை முன்னோர்-களுக்கும் கடவுளுக்கும் படைக்கின்றனர். பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் கொண்-டாடப்படும் இது ‘ஹாம்(வள்ளி கிழங்கு) திருவிழா’ என்றும் ’ஹோமாவோ திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
- இமானுவேல்

No comments:

Post a Comment